முகப்பு
தமிழ்நாடு

திருப்பூர்: பிஏபி நிர்வாகத்தைக் கண்டித்து உள்ளிருப்புப் போராட்டம் நடத்த முடிவு 

பரம்பிக்குளம் ஆழியாறு நிர்வாகத்தைக் கண்டித்து திருப்பூர் மாவட்டம், காங்கயத்தில் விரைவில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 19 ஆகஸ்ட், 2021 at 5:35 PM
பிஏபி கால்வாய்.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:27 AM

வெள்ளக்கோவில்: பரம்பிக்குளம் ஆழியாறு நிர்வாகத்தைக் கண்டித்து திருப்பூர் மாவட்டம், காங்கயத்தில் விரைவில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக பிஏபி வெள்ளக்கோவில் கிளைக் கால்வாய் நீர் பாதுகாப்புக் குழு சார்பில் வியாழக்கிழமை வெளியான அறிக்கையில், முறையற்ற நீர் நிர்வாகத்தால் காங்கயம் முதல் வெள்ளக்கோவில் வரையிலான கிளை வாய்க்காலில் சட்டப்படி எங்களுக்கு வர வேண்டிய தண்ணீர் கிடைப்பதில்லை.  பிஏபி சட்டம் 20/1993 அதிகாரிகளால் கண்டுகொள்ளப்படுவதில்லை. 7 நாள் திறப்பு, 7 நாள் அடைப்பு என மாதத்துக்கு இரண்டு சுற்று தண்ணீர் திறப்பதற்குப் பதில், மூன்று நாள் மட்டுமே திறக்கப்பட்டு 28 நாள்கள் அடைக்கப்படுகிறது. கால்வாயில் ஏராளமான தண்ணீர் திருட்டு நடைபெறுகிறது.

பரம்பிக்குளம் அணை நிரம்பி உபரிநீர் கடலுக்குச் சென்றாலும் இங்கு நீர் வழங்குவதில்லை. மாநில செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வலியுறுத்தியும் அதிகாரிகள் பொருட்படுத்தவில்லை. எங்களின் குறைகளைத் தமிழக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் வகையில், காங்கயம் திருப்பூர் சாலை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விரைவில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

Advertisement

அரசியல் சார்பற்று நடக்கும் இந்தப் போராட்டத்துக்கு பல்வேறு விவசாய சங்கங்கள், சமூக நல அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.