காஞ்சிபுரத்தில் தண்ணீரில் மிதக்கும் அதிசயக் கல்!
காஞ்சிபுரம் பல்லவர்மேட்டில் வசிக்கும் சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள கோயில் குளத்தில் தண்ணீரில் மிதக்கும் அதியக் கல் ஒன்றை எடுத்து அதை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்துள்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பல்லவர்மேட்டில் வசிக்கும் சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள கோயில் குளத்தில் தண்ணீரில் மிதக்கும் அதியக் கல் ஒன்றை எடுத்து அதை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்துள்ளார்.
ராமாயணத்தில் ராவணனிடமிருந்து சீதையை மீட்பதற்காக ராமர் இலங்கைக்கு செல்ல ராமநாதபுரம் சேதுக்கரையிலிருந்து இலங்கைக்கு பாலம் அமைக்க முடிவு செய்தார். அதன்படி வானரங்களுடன் சென்று பாலம் அமைத்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
புகைப்படங்கள்: ஆப்கனில் நடப்பது என்ன? காபூல் நகர வீதிகளில்...
Advertisement
காஞ்சிபுரம் ஒக்கப்பிறந்தான் கோயில் குளத்தில் மிதக்கும் தன்மை கொண்ட அதிசயக் கல் ஒன்றை காஞ்சிபுரம் பல்லவர் மேட்டை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி செல்வராஜ் என்பவர் கண்டுபிடித்துள்ளார். பின்னர் அதனை காஞ்சிபுரத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்துள்ளார்.
இது குறித்து செல்வராஜ் கூறுகையில் எனது வீட்டுக்கு அருகில் உள்ள ஒக்கப்பிறந்தான் கோயில் குளத்தில் தண்ணீரில் மிதக்கும் கல் ஒன்றை பார்த்தேன். அதை எடுத்து வந்து எனது வீட்டு தண்ணீர் தொட்டியில் போட்டுப் பார்த்தேன். அது மூழ்காமல் மிதந்தது. இத்தகவலறிந்து அருகிலிருந்த பொதுமக்கள் பலரும் வந்து ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர். பின்னர் அக்கல்லை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தேன் என்றார்.
காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் உமாசங்கர் கூறியது.. இக்கல் பவளப்பாறை வகையை சேர்ந்தது. கடலில் மட்டுமே காணப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் பகுதி கடலில் அதிகமாக காணப்படுகின்றன. அரிதாக காணப்படும் இவ்வகை பவளப்பாறைகளை யாராவது கொண்டு வந்து காஞ்சிபுரத்தில் உள்ள கோயில் குளத்தில் போட்டிருக்கலாம். தண்ணீரில் இக்கல் மிதக்கிறது என்றார்.