புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளான கார். 
தமிழ்நாடு

நண்பரின் திருமணத்திற்கு சென்றவர்கள் கார் மரத்தில் மோதி ஒருவர் பலி; 4 பேர் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் வெள்ளிக்கிழமை அதிகாலை கார் மரத்தில் மோதிய விபத்தில் நண்பரின் திருமணத்திற்கு சென்ற ஒருவர் உயிரிழந்தார், நான்கு பேர் காயமடைந்தனர்.

DIN


புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் வெள்ளிக்கிழமை அதிகாலை கார் மரத்தில் மோதிய விபத்தில் நண்பரின் திருமணத்திற்கு சென்ற ஒருவர் உயிரிழந்தார், நான்கு பேர் காயமடைந்தனர்.

சென்னை திருவள்ளூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த திருட்சினசன்சிங் மகன் சஞ்சீத்சிங்(51), ருத்திரகோபு மகன் உதயசங்கர்(54), துரை மகன் பரந்தாமன்(41), ராமலிங்கம் மகன் ரத்தினகுமார்(25) , மணி மகன் முருகேசன் (48) இவர்கள் ஐந்து பேரும் இதே நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நண்பரின் திருமணத்திற்காக, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டைக்கு காரில் வந்த போது செங்கிப்பட்டி, கந்தர்வகோட்டை சாலையில் வடுகப்பட்டி கிராமம் அருகே எதிர்பாராத விதமாக சாலை ஓரத்திலிருந்த புளிய மரத்தில் கார் மோதியதில் சஞ்சீத்சிங் (51) சம்பவயிடத்திலேயே பரிதாபமாக இறந்தார், மற்ற நான்கு பேரும் காயமடைந்தனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கந்தர்வகோட்டை காவல் ஆய்வாளர் செந்தில்மாறன் மற்றும் போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT