விருதுநகரில் 4 ரயில் நிலையங்களில் செப்.1 முதல் பார்சல் சேவை நிறுத்தம் 
தமிழ்நாடு

விருதுநகரில் 4 ரயில் நிலையங்களில் செப்.1 முதல் பார்சல் சேவை நிறுத்தம்

சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து செப்டம்பர் மாதம் முதல் தேதியிலிருந்து பார்சல் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

DIN

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து செப்டம்பர் மாதம் முதல் தேதியிலிருந்து பார்சல் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென்னக ரயில்வே துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல ஊர்களில் ரயில் நிலையங்களில் போதுமான அளவு பார்சல் புக்கிங் செய்யப்படுவதில்லை. தற்போது அஞ்சல் துறையில் விரைவு அஞ்சல் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தனியார் கூரியர் நிறுவனங்கள் அதிக எடையுள்ள பொருள்களை நுகர்வோரிடம் இருந்து வாங்கி உரியவர்களிடம் சேர்கிறார்கள். இதனால் பொதுமக்கள் அஞ்சல் துறை மற்றும் தனியார் கூரியர் நிறுவனங்களை நாடிச் செல்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்னர் சிவகாசியில் இருந்து தீப்பெட்டி பொருள்கள் வெளிமாநிலங்களுக்கு ரயில்வே பார்சல் மூலம் அனுப்பப்பட்டு வந்தது. தற்போது விரைவில் ஆர்டர் கொடுத்தவர்களுக்கு பொருள்களை வழங்க வேண்டும் என லாரி மூலம் அனுப்பி விடுகிறார்கள். சிவகாசியில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் வெளிமாநிலங்களுக்கு பட்டாசு மற்றும் தீப்பெட்டி அனுப்ப சொந்தமாக லாரி வாங்கி அதன் மூலம் அனுப்பி வைக்கிறார்கள்.

இதனால் ரயில்வே துறை மூலம் பார்சல் அனுப்புவது இல்லை எனக்கூறலாம். எனவே பல ஊர் ரயில் நிலையங்களில் ரயில்வே பார்சல் சேவை செப்டம்பர் முதல் நிறுத்தப்பட உள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், ஆகிய ரயில் நிலையங்களில் செப்டம்பர் முதல் தேதியில் இருந்து பார்சல் புக்கிங் செய்யப்படமாட்டாது. வெளியூரிலிருந்தும் இந்த ஊர்களுக்கு பார்சல் வராது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

SCROLL FOR NEXT