முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இடிமின்னலுடன் மழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் சென்னை, கடலூர், விழுப்புரம், சேலம், நாமக்கல், ஈரோடு, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காலை முதல் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:


வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் சென்னை, கடலூர், விழுப்புரம், சேலம், நாமக்கல், ஈரோடு, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காலை முதல் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. 

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் கடலூா், விழுப்புரம், வேலூா், திருப்பத்தூா், திருவள்ளூா், அரியலூா், பெரம்பலூா், மதுரை, சிவகங்கை, சேலம் ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஆக.21) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. 

இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை முதல் சென்னை, கடலூர், விழுப்புரம், சேலம், நாமக்கல், ஈரோடு, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காலை முதல் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. 

சென்னையில் காலை முதல் வானம்  மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில்,  அம்பத்தூர், ஆவடி, வில்லிவாக்கம், கோயம்பேடு, புழல், செங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் இடியுடன்கூடிய கனமழை பெய்து வருகிறது. 

இதுபோன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஆத்தூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரியில் வில்லியனூர், காலாப்பேட்டை, காரைக்காலில் ஓரிரு இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.  டெல்டா மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை இரவு முதல் மிதமான மழை பெய்து வருகிறது. 

தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவா்கள் ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரை மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →