முகப்பு
தமிழ்நாடு

கொடநாடு விவகாரத்தில் அதிமுகவுக்கு பயம் இல்லை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

கொடநாடு விவகாரத்தில் அதிமுகவுக்கு இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:58 AM
அமைச்சர் ஜெயக்குமார்
பகிர்:

கொடநாடு விவகாரத்தில் அதிமுகவுக்கு இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த போட்டியில், கொடநாடு விவகாரத்தில் பயப்பட வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை. அதிமுகவுக்கு சங்கடங்கள் கொடுப்பதற்காக கொடநாடு விவகாரத்தை பேரவையில் விவாதிக்கின்றனர்.
நீதிமன்ற அதிகாரத்தை சட்டமன்றமோ, சட்டமன்ற அதிகாரத்தை நீதிமன்றமோ கையில் எடுக்க முடியாது. மரபை மீறி கோடநாடு எஸ்டேட் விவகாரத்தை சட்டப்பேரவையில் விவாதிப்பதா?. 
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள கொடநாடு வழக்கை சட்டப்பேரவையில் விவாதித்தது விதிமீறல். சட்டமன்றத்தில் விவாதிக்க எவ்வளவோ பிரச்னைகள் உள்ளபோது, கோடநாடு விவகாரத்தை பேச வேண்டுமா?

உரிமை மீறல் என்பதால் பேரவையில் இருந்து வெளிநடப்பை செய்து அதிமுகவினர் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர் என்றார். 
மேலும் 55ஆவது விதியின் கீழ் கோடநாடு விவகாரம் குறித்து பேரவையில் விவாதிக்க ஜெயக்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →