கோப்புப்படம் 
தமிழ்நாடு

ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் ஆயுள்வரை செல்லும்: அரசாணை வெளியீடு

ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் செல்லுபடியாகும் காலத்தை ஆயுள்வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

DIN

ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் செல்லுபடியாகும் காலத்தை ஆயுள்வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

ஆசிரியர் தகுதித் தேர்வில்(டெட்) ஒரு முறை தேர்ச்சி பெற்றால் போதும் அது ஆயுள் முழுவதும் செல்லும் என்று தேசிய ஆசிரியர் கல்விக்குழு அறிவித்துள்ளது. 

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 7 ஆண்டுகள் மட்டுமே அதற்கான சான்றிதழ் செல்லும் என்ற விதி இருந்த நிலையில் கடந்த ஆண்டு தேசிய ஆசிரியர் கல்விக்குழு அதில் மாற்றம் செய்திருந்தது.

மத்திய கல்வி அமைச்சகமும் இதுகுறித்த அறிவிப்பை கடந்த ஜூன் மாதம் வெளியிட்டிருந்தது. 

இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் செல்லுபடியாகும் காலத்தை ஆயுள்வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

2011 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கும் இது பொருந்தும் என்றும் இனிவரும் நாள்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவோருக்கு, ஆயுள் முழுவதும் செல்லும் வகையில் சான்றிதழ் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மூப்பனார் நினைவுநாள்: தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மரியாதை!

ஜி.கே.மூப்பனார் புகழஞ்சலி நிகழ்ச்சி! தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக?

யூனியன் பிரதேசத்திற்கு நிவாரண தொகுப்பு அறிவிக்குமாறு மெஹபூபா வலியுறுத்தல்!

சொகுசுக் கப்பல் அனுபவம்: வெள்ள பாதிப்பு ஆய்வின்போது பேசுவதா? சர்ச்சையில் அமைச்சர்கள்

மத்திய பாஜக அரசைக் கண்டித்து திருவள்ளூா் எம்.பி. 2-வது நாளாக உண்ணாவிரதம்!

SCROLL FOR NEXT