முகப்பு
தமிழ்நாடு

சேவூர் அருகே முதியவரைக் கொலை செய்து தலைமறைவாக இருந்த இளைஞர் கைது

சேவூர் அருகே ராமியம்பாளையத்தில் முதியவரைக் கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்த இளைஞரை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை காலை கைது செய்தனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:59 AM
கைது செய்யப்பட்ட சந்தோஷ்
பகிர்:


அவிநாசி: சேவூர் அருகே ராமியம்பாளையத்தில் முதியவரைக் கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்த இளைஞரை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை காலை கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், சேவூர் அருகே ராமியம்பாளையம் பகுதியில் தனியாக வசித்து வந்தவர் வெங்கடாசலம் (80). இவரது வீட்டுக்கு அருகில் வசித்து வருபவர் ராசு என்பவரின் மகன் சந்தோஷ் (25).

இவர்களுக்குள் ஏற்கெனவே நிலத்தகராறு இருந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வழக்கம்போல ஏற்பட்ட தகராறில் சந்தோஷ் கட்டையால் தாக்கியதில் வெங்கடாசலம் உயிரிழந்தார்.

வெங்கடாசலம் உயிரிழந்ததை அறிந்த சந்தோஷ் அங்கிருந்து தலைமறைவானர். இது குறித்து சேவூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் அவிநாசி காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கர் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர் முரளி தலைமையிலான காவலர்கள் தனிப்படை அமைத்து, தலைமறைவான சந்தோஷைத் தேடி வந்தனர். 
இதற்கிடையில்,  ராமியம்பாளையத்தில் உள்ள குளப்பகுதியில் தற்போது, இருப்பதாக கிடைத்த தகவலின்படி, அங்கு விரைந்து சென்ற காவலர்கள், தப்பியோட முயன்ற சந்தோஷை பிடித்து கைது செய்தனர். 
 

முழு கட்டுரையைப் படிக்க →