முகப்பு
தமிழ்நாடு

சென்னையைக் குளிர்வித்த திடீர் கனமழை

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்த திடீர் கனமழை காரணமாக நகர் குளிர்ச்சியாக காணப்பட்டது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
சென்னையைக் குளிர்வித்த திடீர் கனமழை
பகிர்:

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்த திடீர் கனமழை காரணமாக நகர் குளிர்ச்சியாக காணப்பட்டது. 

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. சென்னையைப் பொருத்தவரையில் லேசான மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சென்னையில் காலை முதல் வெயில் சுட்டெரித்துவந்த நிலையில் மதியம் பல்வேறு பகுதிகளில் திடீர் கனமழை பெய்தது. தியாகராய நகர், அயனாவரம், சைதாப்பேட்டை, அண்ணாநகர், பெரம்பூர் , கொரட்டூர், அம்பத்தூர், கோட்டூர்புரம், நந்தனம், பட்டினம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதன்காரணமாக நகரில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியாகக் காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.