தமிழ்நாடு

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

DIN

பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற அவனி லெகாரா உள்ளிட்டோருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், 

பாரா துப்பாக்கிச் சுடுதலில் வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கம் பெற்றுள்ள அவனி லேகேராவுக்கு எனது வாழ்த்துகள். தாங்கள் படைத்துள்ள பெரும் சாதனையால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

வட்டு எறிதலில் வெள்ளி வென்றுள்ள யோகேஷ் கத்தூனியாவுக்கும்; ஈட்டி எறிதலில் முறையே வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றுள்ள தேவேந்திர ஜாஜாரியா மற்றும் சுந்தர் சிங் ஆகியோருக்கும் எனது பாராட்டுகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, மகளிர் டேபிள் டென்னிஸ் போட்டியில் பவினா படேல் வெள்ளிப் பதக்கமும், உயரம் தாண்டுதல் போட்டியில் நிஷாத் குமார் வெள்ளியும், வட்டு எறிதல் போட்டியில் வினோத் குமார் வெண்கலமும் வென்றிருந்தனர். அவர்களுக்கும் முதல்வர் தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பதி செல்வோர் கவனத்துக்கு...முக்கிய அறிவிப்பு!

பத்ரிநாத் கோயில் நடை இன்று திறப்பு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழை!

இன்று அமோகமான நாள்!

மும்மடங்கான டாடா மோட்டாா்ஸ் நிகர லாபம்

SCROLL FOR NEXT