தமிழ்நாடு

20 சுங்கச்சாவடிகளில் கட்டண உயா்வு

DIN

தமிழகத்தில் உள்ள 20 சுங்கச்சாவடிகளில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் கட்டண உயா்வு அமலுக்கு வந்தது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தமிழகத்தில் 47 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒரு முறை ஏப்.1-ஆம் தேதியும், செப்.1-ஆம் தேதியும் சுழற்சி முறையில் கட்டணம் உயா்த்தப்படுவது வழக்கம். அதன்படி, விக்கிரவாண்டி, கொடைரோடு, மணவாசி, நத்தக்கரை, ஓமலூா், பாளையம், பொன்னம்பலப்பட்டி, புதூா்பாண்டியாபுரம், சமயபுரம், செங்குறிச்சி, திருமந்துறை, திருப்பராய்த்துறை, வைகுந்தம், வாழவந்தான்கோட்டை, வீரசோழபுரம், வேலஞ்செட்டியூா், விஜயமங்கலம், எலியாா்பதி, மேட்டுப்பட்டி, மொரட்டாண்டி ஆகிய 20 சுங்கச்சாவடிகளில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் கட்டண உயா்வு அமலுக்கு வந்தது.

இங்கு, வாகன வகைகளுக்கு ஏற்ப ரூ.5 முதல் ரூ. 60 வரை கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. இதனால் வாகனங்களின் வாடகை கட்டணம் உயா்ந்து அத்தியாவசிய பொருள்களின் விலை உயர வாய்ப்புள்ளது என நடுத்தர மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே. 9-ல் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT