முகப்பு
தமிழ்நாடு

தொண்டர் மீது தாக்குதல்: அதிமுக தலைமை அலுவலகத்தில் பரபரப்பு

அதிமுக உள்கட்சித் தேர்தலுக்கு விருப்ப மனு அளிக்க வந்த புகழேந்தியின் ஆதரவாளரை அதிமுகவினர் தாக்கியதால் கட்சித் தலைமை அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:37 AM
அதிமுக தலைமை அலுவலகம்(கோப்புப்படம்)
பகிர்:

அதிமுக உள்கட்சித் தேர்தலுக்கு விருப்ப மனு அளிக்க வந்த புகழேந்தியின் ஆதரவாளரை அதிமுகவினர் தாக்கியதால் கட்சித் தலைமை அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

அதிமுக உள்கட்சித் தேர்தலுக்க்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்று(டிச.4) கடைசி நாள். அதிமுக ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகளுக்கு முறையே ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி ஆகிய இருவரும் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தனர். 

இந்நிலையில் முன்னதாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தியின் சார்பில் அவரது வழக்கறிஞர் ஒருவர் விருப்பமனு அளிக்க ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்துள்ளார். 

இதுகுறித்து தெரிந்த அதிமுகவினர் அவரைத் தாக்கி வெளியே அனுப்பியுள்ளனர். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு எவ்வாறு விருப்பமனு கொடுக்க முடியும் என்று கூறி வழக்கறிஞரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனால் அதிமுக தலைமை அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

முழு கட்டுரையைப் படிக்க →