முகப்பு
தமிழ்நாடு

கடற்படை தினம்: போர் நினைவிடத்தில் ஆளுநர் மரியாதை; வீரர்கள் அணிவகுப்பு

இந்திய கடற்படை தினத்தையொட்டி சென்னையில் போர் வீரர்களின் நினைவிடத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி மரியாதை செலுத்தினார். கடற்படை வீரர்களின் அணிவகுப்பையும் ஏற்றுக்கொண்டார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:37 AM
பகிர்:

இந்திய கடற்படை தினத்தையொட்டி சென்னையில் போர் வீரர்களின் நினைவிடத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி மரியாதை செலுத்தினார். கடற்படை வீரர்களின் அணிவகுப்பையும் ஏற்றுக்கொண்டார். 

கடந்த 1971-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரின்போது, டிசம்பா் 4-ஆம் தேதி கராச்சியில் உள்ள துறைமுகத்தில் பாகிஸ்தான் கடற்படையை இந்திய கடற்படை தோற்கடித்தது.

பாகிஸ்தானின் போர்கப்பல்களை இந்திய கடற்படை தாக்கி அளித்தது. இந்த வெற்றியை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4 ஆம் தேதி இந்திய கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது. 

Advertisement

இன்று கடற்படை தினத்தையொட்டி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, கடற்படை வீரர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். நமது கடற்படையின் வீரதீரச் செயல்களால் தேசம் பெருமிதம் கொள்கிறது என்றார் .

இதையடுத்து, சென்னை காமராஜர் சாலையில் உள்ள போர் வீரர்களின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். 

தொடர்ந்து அடையாறில் உள்ள ஐ.என்.எஸ். கடற்படைத் தளத்தில் நடைபெற்ற கடற்படை வீரர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments