முகப்பு
தமிழ்நாடு

கரோனா உயிரிழப்பு: ரூ.50,000 நிவாரணம் அறிவிப்பு

கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது.

Updated On : 6 டிசம்பர், 2021 at 9:41 PM
கோப்புப் படம்
பகிர்:

கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது.

மாநில பேரிட நிதியில் இருந்து உடனடி நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கரோனா தொற்று இரண்டாவது அலை பரவல் குறைந்து வரும் நிலையில், தென்னாப்பிரிக்காவில் உருவான ஒமைக்ரான் தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. 

Advertisement

கரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. தமிழகத்தில் கடந்த 24  மணி நேரத்தில் புதிதாக 10 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,539-ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது.

மாநில பேரிடர் நிதியிலிருந்து உடனடியாக கரோனா நிவாரணம் வழங்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.