முகப்பு
தமிழ்நாடு

தடுப்பூசி செலுத்தாதோர் பொது இடங்களுக்கு செல்லத் தடை: நாமக்கல்லில் அமல்

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தாதோர் பொது இடங்களுக்கு செல்லத் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:38 AM
கோப்புப்படம்
பகிர்:

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தாதோர் பொது இடங்களுக்கு செல்லத் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் ஒமைக்ரான் கரோனா வகை நோய்த் தொற்றின் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தாத மக்கள் திரையரங்கு, பூங்கா, அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கரோனா விதிமுறைகளை மீறும் பொதுமக்கள், வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தாதோருக்கு பொது இடங்களுக்கு செல்ல தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →