திமுக அரசைக் கண்டித்து டிச. 9ல் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்: அதிமுக
மக்கள் பிரச்னையில் கவனம் செலுத்தாத திமுக அரசைக் கண்டித்து டிசம்பர் 9ஆம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
சென்னை: மக்கள் பிரச்னையில் கவனம் செலுத்தாத திமுக அரசைக் கண்டித்து டிசம்பர் 9ஆம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
இதையும் படிக்கலாமே.. ஒமைக்ரான் குறித்து நல்ல செய்தி சொன்ன அமெரிக்க ஆலோசகர்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி கூட்டாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மக்கள் பிரச்னையில் கவனம் செலுத்தாத திமுக அரசைக் கண்டித்து டிசம்பர் 9ஆம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
- பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரிகைளை உடனடியாக குறைக்கவும்.
- மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்கவும்
- வெள்ளத்தால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்குப் போதுமான இழப்பீடு அளிக்கவும்
- பொங்கல் விழாவைக் கொண்டாட உதவும் வகையில் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகை அளிக்கவும்
- அம்மா மினி கிளினிக்குகளை திமுக அரசு மூடுவதைக் கண்டித்தும்
- அரசின் அலட்சியத்தால் கடுமையாக உயர்ந்திருக்கும் அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயர்வை எதிர்த்தும்,
- தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வலியுறுத்தியும்,
அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் டிசம்பர் 9ஆம் தேதி வியாழக்கிழமை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.