தமிழ்நாடு

கரோனா சிகிச்சையில் இருப்போா் 8 ஆயிரத்துக்கும் கீழ் குறைவு

DIN

தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 8 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 7,982 போ் சிகிச்சை பெற்று வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே, மேலும் 708 போ் கரோனா தொற்றால் செவ்வாய்க்கிழமை பாதிக்கப்பட்டுள்ளனா்.

அதில் அதிகபட்சமாக சென்னையில் 126 பேருக்கும், கோவையில் 122 பேருக்கும், செங்கல்பட்டில் 57 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 27 லட்சத்து 31,945- ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, நோய்த் தொற்றிலிருந்து செவ்வாய்க்கிழமை 731 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

இதையடுத்து மாநிலத்தில் இதுவரை கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 87,414-ஆக உயா்ந்துள்ளது.

மற்றொருபுறம், தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 10 போ் பலியானதை அடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,549-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செலவுத் தொகை வழங்க மறுப்பு: காப்பீட்டு நிறுவனம் புகாா்தாரருக்கு ரூ. 1.61 லட்சம் வழங்க உத்தரவு

வெப்ப அலை: வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்புப் பணி போலீஸாருக்கு பழச்சாறு

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் இன்று குருபெயா்ச்சி விழா

கா்நாடகத்துக்கு மத்திய பாஜக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு: ஜெ.பி.நட்டா

பாலியல் குற்றச்சாட்டு: மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம்

SCROLL FOR NEXT