தமிழ்நாடு

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் தாமதித்ததை ஏற்க முடியாது: உச்சநீதிமன்றம்

DIN

பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை அடுத்தாண்டு ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரி அரசியல் கட்சியினர் , தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

சிறையில் இருந்து விடுவிக்க கோரி பேரறிவாளன் தரப்பில் இருந்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

முன்னதாக , பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் முடிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிபதி பேரறிவாளன் விவகாரத்தில் விடுதலை செய்யக்கோரிய தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீது முடிவெடுக்க ஆளுநர் நீண்ட காலம் எடுத்துக்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார். 

மேலும் இந்த வழக்கில் மத்திய அரசு இனியும் தாமதிக்கக் கூடாது எனத் தெரிவித்ததுடன் வழக்கை அடுத்தாண்டு ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரத்னம் வசூல் எவ்வளவு?

SCROLL FOR NEXT