சூலூர் நோக்கிப் புறப்பட்ட விபின் ராவத் உடல்
வெலிங்டன் ராணுவ தளத்திலிருந்து முப்படை தளபதி விபின் ராவத் உடல் ஆம்புலன்ஸ் மூலமாக சூலூருக்கு புறப்பட்டது.
வெலிங்டன் ராணுவ தளத்திலிருந்து முப்படை தளபதி விபின் ராவத் உடல் ஆம்புலன்ஸ் மூலமாக சூலூருக்கு புறப்பட்டது.
கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் முப்படை தளபதி விபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் புதன்கிழமை பலியாகினர்.
இதையும் படிக்க | விமானப் படை தளபதி தலைமையில் விசாரணை: ஹெலிகாப்டர் விபத்து குறித்து ராஜ்நாத் விளக்கம்
இவர்களின் உடலுக்கு வெலிங்டன் ராணுவ தளத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முப்படைகளின் தளபதிகள், தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தராஜன், அமைச்சர்கள், அதிகாரிகள் இன்று அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிக்க | விபின் ராவத் உள்பட 13 பேரின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
இதனைத் தொடர்ந்து தனித்தனி ஆம்புலன்ஸ்கள் மூலம் 13 பேரின் உடல்களும் சூலூர் விமானப்படை தளத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது.
சூலூரிலிருந்து இன்று மாலை ராணுவ விமானம் மூலம் 13 பேரின் உடல்களும் தில்லிக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.