தமிழ்நாடு

குன்னூர் விபத்து: காவல்துறை வழக்குப்பதிவு; விசாரணை அதிகாரியாக முத்துமாணிக்கம் நியமனம்

முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விபத்துக்குள்ளானது தொடர்பாக வெலிங்டன் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

DIN

முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விபத்துக்குள்ளானது தொடர்பாக வெலிங்டன் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பிரிவு 174, இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி முத்துமாணிக்கம் நியமிக்கப்பட்டுள்ளார். 

விபத்து நடந்த காட்டேரி பகுதி வெலிங்டன் காவல் நிலையத்திற்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

கோவையிலிருந்து குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு செல்லும்போது ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் புதன்கிழமை பலியாகினர். ராணுவ கேப்டன் வருண் சிங் 80% தீக்காயங்களுடன் உயர்தர சிகிச்சை கருவிகள் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 

உயிரிழந்தவர்களின் உடல்கள் வெலிங்டன் சதுக்கத்தில் முக்கிய பிரமுகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில் தற்போது அங்கிருந்து சூலூர் விமானப்படை தளத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அங்கிருந்து விமானம் மூலம் உடல்கள் தில்லி கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளா் பட்டியலில் சோனியா காந்தி பெயா் முறைகேடாக சோ்ப்பு: நடவடிக்கை கோரி நீதிமன்றத்தில் மனு

ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் வழக்குப் பதிவு

வாணியம்பாடி-காவலூா் இடையே புதிய பேருந்து போக்குவரத்து: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

பண வரவு இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கல்லூரியில் விற்பனைச் சந்தை

SCROLL FOR NEXT