தமிழ்நாடு

மணிமுத்தாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீர் திறக்க உத்தரவு

DIN

பாசனத்திற்காக மணிமுத்தாறு நீர்த்தேக்கத்திலிருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், மணிமுத்தாறு நீர்த்தேக்கத்திலிருந்து நடப்பாண்டிற்கான (2021-2022) முன்னுரிமை அல்லாத பகுதியான 3-வது மற்றும் 4-வது ரீச்சுகளை சார்ந்த 12,018 ஏக்கர் மறைமுக பாசனப்பரப்புகளுக்கு 10.12.2021 முதல் 31.03.2022 முடிய 112 நாட்களுக்கு பிசான பருவ சாகுபடி செய்வதற்காக தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. 

இதன் மூலம் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நாங்குநேரி, திசையன்விளை, இராதாபுரம், ஏரல், திருவைகுண்டம், சாத்தான்குளம் மற்றும் திருச்செந்தூர் வட்டங்களில் உள்ள 12,018 ஏக்கர் மறைமுக பாசன நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT