தமிழகத்தில் இன்று மேலும் 674 பேருக்கு கரோனா
தமிழகத்தில் இன்று புதிதாக 674 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று புதிதாக 674 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மாநிலத்தில் இதுவரை 5.54 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 27 லட்சத்து 35,389 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 116 பேருக்கும், கோவையில் 102 பேருக்கும், ஈரோட்டில் 51 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதையும் படிக்க- ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அண்ணாமலை சந்திப்பு
இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து மேலும் 708 போ் விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 91,054-ஆக அதிகரித்துள்ளது.
மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 7,723 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 13 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,612-ஆக அதிகரித்துள்ளது.