தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் மீது வழக்கு

நாகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக நாகை மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது நாகை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

DIN

நாகப்பட்டினம்: தமிழக அரசைக் கண்டித்து நாகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக நாகை மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது நாகை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மக்கள் பிரச்னையில் திமுக அரசு உரிய கவனம் செலுத்தவில்லை எனக் கூறி நாகை மாவட்ட அதிமுக சார்பில்  நாகை அவுரித்திடலில் கண்டன  ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை  நடைபெற்றது. 

கட்சியின் மாவட்டத்தலைவர் ஆர்.ஜீவானந்தம் தûலைமையில் நடைபெற்ற  இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுத  நாகை மாவட்டச் செயலாளரும்,  வேதாரண்யம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் பங்கேற்றுப் பேசினார்.

இந்நிலையில், அதிமுக  மாவட்ட அவைத்தலைவர் ஆர்.ஜீவானந்தம்,
முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், அமைப்புச் செயலாளர் எஸ். ஆசைமணி, நாகை நகரச் செயலாளர் தங்க.கதிரவன், நகர அவைத் தலைவர் ப. அறிவழகன் மற்றும் பலர் மீது சட்ட விரோதமாக பொது  இடத்தில் கூடுதல், வழிமறித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வெளிப்பாளையம் நாகை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸ் 9: வெளியேறும்போது கூட திவ்யாவை புறக்கணித்த சான்ட்ரா!

ஓரிரு நாள்களில் அதிமுக கூட்டணியில் புதிதாக ஒரு கட்சி இணைகிறதா? - இபிஎஸ்

ராகுல் காந்தி நாளை கூடலூர் வருகை!

ரஜினி - 173 புரோமோ இசையமைப்பாளர் இவரா?

அறிவியல் ஆயிரம்: செயற்கை மரபணுவைக் கண்டுபிடித்த ஹர் கோவிந்த் கொரானா!

SCROLL FOR NEXT