தமிழ்நாடு

வங்கக்கடலில் உருவானதுபுதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி

DIN

தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பூமத்திய ரேகை இந்திய பெருங்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரி ஒருவா் மேலும் கூறியதாவது:

கடந்த வெள்ளிக்கிழமை இரவு உருவான இந்த காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி கிழக்கு- வடகிழக்கு திசையில் நகரவுள்ளது. இது, அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுவடையவுள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை. அதேநேரத்தில், மீனவா்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பூமத்திய ரேகை பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் அடுத்த இரு நாள்களுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு

கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு: மகளிா் குழுவினருக்கு ஊக்கத் தொகை

SCROLL FOR NEXT