முகப்பு
தமிழ்நாடு

100 பள்ளிக் கட்டடங்களை இடிக்க புதுக்கோட்டை ஆட்சியர் உத்தரவு

முதல்கட்டமாக  பழுதடைந்துள்ள 100 பள்ளிக் கட்டடங்களை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்தார்.

Updated On : 18 டிசம்பர், 2021 at 10:43 AM
ஏம்பல் பகுதியிலுள்ள பழைய பள்ளிக் கட்டடம்.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:13 AM

புதுக்கோட்டை:  முதல்கட்டமாக  பழுதடைந்துள்ள 100 பள்ளிக் கட்டடங்களை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்தார்.

நெல்லையில் பள்ளிக் கட்டடம் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து பொதுப்பணித் துறையினருக்கு இதுகுறித்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 325 அரசுப் பள்ளிக் கட்டடங்கள் உள்ளன. அவற்றில் 259 பள்ளிக் கட்டடங்கள் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளிக் கட்டடங்கள்; 66 பள்ளிக் கட்டடங்கள் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக் கட்டடங்கள்.

Advertisement

இந்த சம்பவத்துக்கு முன்பே புதுக்கோட்டை மாவட்டத்தில்  மோசமான நிலையிலுள்ள பள்ளிக் கட்டடங்கள் குறித்து கணக்கெடுத்து வைத்திருந்தோம்.

தற்போது முதல் கட்டமாக 100 கட்டடங்களை இடிப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கவுள்ளன. திங்கள்கிழமை முதல் இதற்கான அலுவல் பணிகள் ஆரம்பமாகும்.

விரைவில் அவற்றை இடிக்கவும், தொடர்ந்து அந்தந்தப் பகுதியில் இருந்து வரும் புகார்களின் அடிப்படையில் இடிக்க வேண்டிய கட்டடங்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் என 'தினமணி' நிருபரிடம் ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.