தமிழ்நாடு

வேலூர் நகைக் கடை கொள்ளையில் ஒருவர் கைது

வேலூரில் உள்ள பிரபல தனியார் நகைக்கடையின் சுவரில் துளையிட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார்.

DIN

வேலூர்: வேலூரில் உள்ள பிரபல தனியார் நகைக்கடையின் சுவரில் துளையிட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார்.

வேலூர் காட்பாடி சாலையில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க நகை கடை அமைந்துள்ளது. இந்த கடையின் தரைதள பக்கவாட்டுச் சுவரில் செவ்வாய்க்கிழமை நள்ளிவு  துளையிட்டு நகைகளை கொள்ளையடித்துச் செல்லப்பட்டது. காலையில் கடையை திறந்து பார்த்தபோது ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

இதுகுறித்து தகவலறிந்த வேலூர் வடக்கு போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தி வந்தனர். 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில், வேலூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்ட
வேலூர் குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த ராமன்(27) என்பவரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலவச இருதய மருத்துவ முகாம்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

மாநகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து! 15 வாகனங்கள் எரிந்து சேதம்!

வெனிசுலா எண்ணெய்க் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா!

கவுண்டம்பாளையத்தில் 24 மணி நேர பதிவு அஞ்சல் அலுவலகம்

52 சிறுவா்களுக்கு விருது: எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT