தமிழகத்தில் புதிதாக 605 பேருக்கு கரோனா; 697 குணமடைந்தனர்
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 605 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக 6 பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 605 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக 6 பேர் உயிரிழந்தனர்.
நேற்று 610 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.
படிக்க | பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது: அமைச்சர் உறுதி
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை திங்கள் கிழமை வெளியிட்டுள்ளது. இதில் 1,01,237 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 605 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,40,411-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 6 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,686-ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக 697 பேர் குணமடைந்ததால், இதுவரை மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,96,553-ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக பாதிப்பு
சென்னையில் புதிதாக 126 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 5,60,459-ஆக அதிகரித்துள்ளது.
கோவையில் 98 பேருக்கும், ஈரோட்டில் 53 பேருக்கும், செங்கல்பட்டில் 45 பேருக்கும், திருப்பூரில் 43 பேருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.