தமிழ்நாடு

சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை

நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.

DIN

நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் அயலான். ஆர்.ரவிக்குமார் இயக்கும் இந்தப் படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது. 

இந்த நிலையில் படத்தை தயாரித்துள்ள 24 ஏ.எம்.நிறுவனம் பெற்ற ரூ.5 கோடி கடனை திருப்பி செலுத்தக் கோரி டேக் என்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. 
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அயலான் படத்தை ஜனவரி 3ஆம் தேதி வரை வெளியிட இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன் வழக்கு விசாரணையையும் அன்றைய தினத்திற்கு ஒத்தி வைத்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

SCROLL FOR NEXT