தமிழ்நாடு

தமிழகம் உள்பட 10 மாநிலங்களுக்கு விரைகிறது மத்திய குழு

DIN


புது தில்லி: ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலேசானை வழங்க, ஒமைக்ரான் பாதிப்பு அதிகம் உள்ள தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு, மத்திய குழு விரைகிறது.

ஒமைக்ரான் தொற்று பரவலைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்க மத்திய குழு தமிழகம் வரவிருக்கிறது.

நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகம் உள்ள தமிழகம், கேரளம், மகாராஷ்டிரம், கர்நாடகம், மிசோரம், பிகார், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு மத்திய குழு விரைகிறது. இக்குழுவினர், மாநிலத்தில் நிலவும் ஒமைக்ரான் பரவல் தன்மை குறித்து ஆய்வு நடத்தி, எந்தவிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு ஆலோசனை வழங்கவிருக்கிறது.

மேலும், தடுப்பூசி செலுத்துவதில் சுணக்கம் காட்டும் மாநிலங்களுக்கு நேரில் சென்று அறிவுறுத்தல்களை வழங்கவும் உள்ளதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT