முகப்பு
தமிழ்நாடு

நகர்ப்புற தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி? - பிரேமலதா விளக்கம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்றும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் படங்களில் நடித்து வருவதாக வரும் தகவல் தவறானது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். 

Updated On : 25 டிசம்பர், 2021 at 12:18 PM
பிரேமலதா விஜயகாந்த்
பகிர்:

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்றும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் படங்களில் நடித்து வருவதாக வரும் தகவல் தவறானது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். 

இதுதொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும். கட்சியில் செயல் தலைவர் பதவியை உருவாக்க வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். புதியதாக செயல் தலைவர் பதவி ஏற்படுத்துவது குறித்து பொதுக் குழுவில் விஜயகாந்த் அறிவிப்பார்.

மேலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் படங்களில் நடித்து வருவதாக வரும் தகவல் தவறானது. அவர் படங்கள் எதுவும் நடிக்கவில்லை. அவர் ஓய்வு எடுத்து வருகிறார் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.