தமிழ்நாடு

முதல்வர் வருகை: விழாக்கோலத்தில் திருச்சி!

தமிழக முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு திருச்சி மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

DIN

திருச்சி: தமிழக முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு திருச்சி மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

மக்களை தேடி முதல்வர் திட்ட சிறப்பு முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணவும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும்,  முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கவும் திருச்சிக்கு வியாழக்கிழமை வருகை தருகிறார்.

தஞ்சாவூரில் அரசு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு திருச்சிக்கு இன்று பிற்பகல் வருகை தருகிறார் முதல்வர். இதையடுத்து, முதல்வர் பங்கேற்கும் விழாவுக்காக திருச்சி, திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கேர் கல்லூரி மைதானத்தில் பிரமாண்ட பந்தல், மேடை உள்ளிட்ட சகல வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

முதல்வர் வருகையையொட்டி திருச்சி மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. முதல்வர் தொடங்கி வைக்கும் புதிய திட்டங்கள் மின்னொளியில் ஜொலிக்கின்றன. குறிப்பாக சத்திரம் புதிய பேருந்து நிலையம், திருச்சி மலைக்கோட்டை மின்னொளியில் ஜொலிக்கிறது. முதல்வரை வரவேற்க திருச்சி சுற்றுலா மாளிகையில் இருந்து விழா நடைபெறும் மைதானம் வரை வழிநெடுகிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

8 இடங்களில் சாலையோர மேடையமைத்து மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு முன் நின்று செயல்படுத்தி வருகிறார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் உடனிருந்து விழா பணிகளை கவனித்து வருகின்றனர். மொத்தம் ரூ. 1084.80 கோடி மதிப்பிலான நலத் திட்டங்களை முதல்வர் செயல்படுத்துகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT