மதுரை காவல்துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு
மதுரை மாவட்டம் காவல்துறை சார்பாக 32வது சாலைப் பாதுகாப்பு மாதம் 18.01.2021 முதல் 17.02.2021 வரை கடைப்பிடிக்கப்பட்டது.
உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் காவல்துறை சார்பாக 32வது சாலைப் பாதுகாப்பு மாதம் 18.01.2021 முதல் 17.02.2021 வரை கடைப்பிடிக்கப்பட்டது.
உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை அருகே சாலைப் பாதுகாப்பு மாதம் விழாவை முன்னிட்டு உசிலம்பட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜன் தலைமையில், காவல் ஆய்வாளர் தெய்வீகபாண்டியன், போக்குவரத்து ஆய்வாளர் ஆறுமுகம், சார்பு ஆய்வாளர் சேகர் மற்றும் காவலர்கள் கலந்துகொண்டு வாகனத்தில் வருவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வாகனத்தில் முகக்கவசம், தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்புகளும் விழிப்புணர்வு துண்டு பிரசுரமும் வழங்கப்பட்டது.