முகப்பு
தமிழ்நாடு

பிப்ரவரி 21-ம் தேதி சென்னையில் மக்கள் நீதி மய்யம் மாநாடு

மக்கள் நீதி மய்யத்தின் நான்காம் ஆண்டு தொடக்க விழா மாநாடு வரும் 21 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
கமல்ஹாசன்
பகிர்:


சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் நான்காம் ஆண்டு தொடக்க விழா மாநாடு வரும் 21 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் நீதி மய்யத்தின் நான்காம் ஆண்டு தொடக்க விழா மாநாடு வரும் 21 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

மேலும் இந்த மண்ணையும், மக்களையும், மொழியையும்  காக்கவே நாம் களமிறங்கி இருக்கிறோம். இந்த மகத்தான பயணத்தில் எதுவும் நமக்கு தடை இல்லை நாம் ஒருபோதும் துவளும் தடையல்ல என்பதை தமிழகத்திற்கு உணர்ந்த மக்கள் நீதி மய்யத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் இந்த மாநாட்டில் அணிதிரள வேண்டும். 

Advertisement

மக்கள் உற்றார் உறவினர்கள், சுற்றத்தார், நண்பர்கள், ஒத்த கருத்தாளர்கள், அறம் சார் மனிதர்கள், நேர்மையாளர்கள், மக்கள் சேவகர்கள் புடைசூழ பிப்ரவரி 21 ஆம் தேதி சென்னை நோக்கி அலை அலையாய் திரண்டு வாருங்கள். 

பழிபோடும் அரசியல், பழிவாங்கும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு வழிதோடும் அரசியல், வழிதேடும் அரசியல், வழிகாட்டும் அரசியலுக்குத் தொடக்க உரையை சேர்ந்து எழுதுவோம் என கமல்ஹாசன் கூறியுள்ளார். ஊர் கூடி தேர் இழுந்தால், நாளை நமதே. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments