முகப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் படுத்துறங்கிய மாற்றுத்திறனாளிகள்.
தமிழ்நாடு

தொடரும் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்:  ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் படுத்துறங்கிய மாற்றுத்திறனாளிகள்

தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் குடியேறும்  போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:29 PM
ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் படுத்துறங்கிய மாற்றுத்திறனாளிகள்.
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர்: தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் குடியேறும்  போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூரில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 21 பேரை நகர் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட 21 பேரும் தங்களது வீடுகளுக்கு செல்லாமல் திடீரென மீண்டும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர்

இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்களுடன் வட்டாட்சியர் சரவணன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தபோதும் இரவு 10 மணியை கடந்ததால் அங்கேயே படுக்கையை விரித்து உறங்கினர். 

இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போராட்டக்காரர்கள் தனியாருக்குச் சொந்தமான மண்டபத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டனர். மண்டபத்திற்கு கொண்டுச் செல்லப்பட்ட போதும் அங்கும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். 

இதனை தொடர்ந்து தனியார் திருமண்டம் மண்டபத்திற்கு முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →