ஆத்தூர் அருகே குடும்பத் தகராறில் கணவன்-மனைவி இருவரும் காதில் பூச்சி மருந்தை ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள புங்கவாடி கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் கூலித்தொழிலாளி, அவரது மனைவி சத்யா. இவர்களுக்கு அபிநயா என்ற மகளும், சங்கீத் என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த இருவரும் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். செவ்வாய்க்கிழமை ஆத்தூருக்கு குடும்பத்துடன் வந்தவர்கள் பூச்சி மருந்தை வாங்கி சென்றுள்ளனர். மஞ்சினி அருகே சென்றவர்கள் இருவரும் காதில் மருந்தை ஊற்றிக்கொண்டு குழந்தைகளுக்கும் கட்டாயப்படுத்தி வாயில் ஊற்றியுள்ளனர். இதில் இரு குழந்தைகளும் திமிறிக்கொண்டு ஓடிவந்து உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
உறவினர்கள் சென்றுபார்த்த போது வேல்முருகன் சத்யா உயிரிழந்துள்ளனர். உடனே குழந்தைகளை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்த ஆத்தூர் காவல் ஆய்வாளர் எஸ்.உமாசங்கர் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.