முகப்பு
தமிழ்நாடு

நெரிஞ்சிப்பேட்டையில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை

பவானி அருகேயுள்ள  நெரிஞ்சிப்பேட்டை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசுகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 11 பிப்ரவரி, 2021 at 3:20 PM
நெரிஞ்சிப்பேட்டையில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:00 AM

பவானி: பவானி அருகேயுள்ள  நெரிஞ்சிப்பேட்டை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசுகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

இச்சங்கத்தில் நாளொன்றுக்கு 1,100 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, 160 லிட்டர் உள்ளூர் தேவைக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு ரூ.1.30 கோடிக்கு பால் கொள்முதல் செய்த இச்சங்கத்தில் நிகர லாபத்தில் 50 சதவீதம் போனஸாக வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, அதிகளவில் பால் உற்பத்தி செய்த விவசாயிகள் வேலுச்சாமி, சின்னப்பன், பொன்னுசாமி ஆகியோர் முதல் மூன்றிடங்களைப் பிடித்தனர். இவர்களுக்கு, போனஸ் மற்றும் ஊக்கப் பரிசினை சங்கத் தலைவரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான என்.ஆர்.கோவிந்தராஜர் வழங்கினார். 

Advertisement

மேலும், பால் உற்பத்தியாளர்கள் 266 பேருக்கு ரூ.1.60 லட்சம் போனஸ்  வழங்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.