தமிழ்நாடு

தை அமாவாசை: நெல்லை தாமிரவருணி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

DIN


திருநெல்வேலி: தை அமாவாசையை முன்னிட்டு திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

பொதுமக்கள் இறந்த தங்களின் முன்னோர்களுக்காக அமாவாசை நாள்களில் ஆற்றில் புனிதநீராடி தர்ப்பணம் செய்வது வழக்கம். இந்த அமாவாசை நாள்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய இயலாதவர்கள், ஆடி, தை மாதங்களில் வரும் அமாவைசை தினங்களில் தர்ப்பணம் செய்வது நல்லது. 

கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த ஆடி மாதம் பொதுமக்கள் நீர்நிலைகளில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, தை அமாவாசையான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக காலை முதல் நீர் நிலைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது. 

குறுக்குத்துறை முருகன் கோவில் தர்ப்பணம் செய்து வழிபட்ட மக்கள்.

அதன்படி, திருநெல்வேலி பகுதியில் உள்ள குறுக்குத்துறை, குட்டத்துறை, பேராத்துச் செல்வி அம்மன் கோவில், அனந்த கிருஷ்ணாபுரம், செப்பரை, பாலாமடை, ஜடாயு தீர்த்தம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தாமிரவருணி படித்துறைகளில் பொதுமக்கள் புனித நீராடி, முன்னோர்களுக்காக தர்ப்பணம் செய்தனர். 

இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள கோவில்களில் வழிபட்டனர். பின்னர் பசுவுக்கு அகத்திக்கீரை வழங்கினர்.

குறுக்குத்துறை முருகன் கோவில் தர்ப்பணம் செய்து வழிபட்ட மக்கள்.

திருநெல்வேலி சுற்றுவட்டார மக்கள் ஒரே நேரத்தில் திரண்டதால் கூட்டம் அலைமோதியது. இதனால், அப்பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை அதிவிரைவு ரயில் 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

SCROLL FOR NEXT