தமிழ்நாடு

வேளகாபுரத்தில் சுதாகரன், இளவரசியின் சொத்துகள் பறிமுதல்: ஆட்சியர் ஆய்வு

DIN

உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின்படி சுதாகரன், இளவரசிக்குச் சொந்தமான வேளகாபுரத்தில் உள்ள 41 ஏக்கர் 22 சென்ட் சொத்துகள் தமிழக அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

உச்சநீதிமன்ற இறுதிதீர்ப்பின்படி சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோருக்கு சொந்தமான இடங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வரும் நிலையில் திருவள்ளூர் மாவட்டம் வேளகாபுரம் கிராமத்தில் மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ் லிமிடெட் என்ற பெயரில் உள்ள சுமார் 41 ஏக்கர்  22 செண்ட் இடமானது தமிழ்நாடு அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சொத்துகளிலிருந்து பெறப்படும் வருவாய் அனைத்தும் தமிழக அரசிற்கு சொந்தமானது என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்திருந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு ஆட்சியர் பொன்னையா ஆய்வு செய்தார். இதில் ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT