முகப்பு
தமிழ்நாடு

தமிழில் பதவிப்பிரமாணம் எடுக்க வேண்டும் என்பது நீண்ட கால கனவு: தமிழிசை

தமிழில் பதவிப்பிரமாணம் எடுக்க வேண்டும் என்பது தனது நீண்ட கால கனவு என புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்ட தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:33 PM
புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
பகிர்:


புதுச்சேரி: தமிழில் பதவிப்பிரமாணம் எடுக்க வேண்டும் என்பது தனது நீண்ட கால கனவு என புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்ட தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். 

புதுவை யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநராக பதவி வகித்த கிரண்பேடி, அந்தப் பதவியிலிருந்து செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டாா்.

இதையடுத்து, மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை தெலங்கானா ஆளுநராக உள்ள தமிழிசை சௌந்தரராஜன், புதுவை துணைநிலை ஆளுநா் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பாா் என குடியரசுத் தலைவா் மாளிகை அறிவித்தது.

இந்நிலையில்,  தமிழிசை சௌந்தரராஜன் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு புதுச்சேரி யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராக பதவியேற்றுக்கொண்டார். 

அவருக்கு சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். தமிழிசை சௌந்தரராஜன்  பதவியேற்பு மற்றும் ரகசிய பாதுகாப்பு உறுதிமொழியை தமிழில் எடுத்துக்கொண்டார். 

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் பங்கேற்றனர். 

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பதவியேற்ற பின்னர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: 

தமிழில் பதிவிப்பிரமாணம் எடுக்க வேண்டும் என்பது எனது நீண்ட கால கனவு. தமிழில் உறுதிமொழி எடுக்கவும், தமிழில் பேசவும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த இறைவனுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தமிழிசை கூறினார். 

முழு கட்டுரையைப் படிக்க →