தமிழ்நாடு

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்பு

DIN


புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பேற்றுக்கொண்டார். 

கடந்த 2016, மே 28-ஆம் தேதி முதல் புதுவை யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநராக பதவி வகித்த கிரண்பேடி, அந்தப் பதவியிலிருந்து செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டாா்.

இதையடுத்து, மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை தெலங்கானா ஆளுநராக உள்ள தமிழிசை சௌந்தரராஜன், புதுவை துணைநிலை ஆளுநா் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பாா் என குடியரசுத் தலைவா் மாளிகை அறிவித்தது.

இந்நிலையில், தமிழிசை சௌந்தரராஜன் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு புதுச்சேரி யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராக பதவியேற்றுக்கொண்டார். 

அவருக்கு சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தமிழிசை சௌந்தரராஜன்  பதவியேற்பு மற்றும் ரகசிய பாதுகாப்பு உறுதிமொழியை தமிழில் எடுத்துக்கொண்டார். 

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் பங்கேற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

SCROLL FOR NEXT