தமிழ்நாடு

புதுவை ஆட்சி கவிழ்ந்ததற்கு பாஜக காரணம் அல்ல: எல்.முருகன்

DIN

புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்ததற்கு பாஜக காரணம் அல்ல, நாராயணசாமியின் இயலாமையே காரணம் என்றார் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன்.

குமரி மாவட்டம் நாகர்கோவில் சட்டப்பேரவை தொகுதி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் கூட்டம் நாகர்கோவிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக வந்த முருகன் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழக தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 234  தொகுதிகளிலும் தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழக தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி பிப்.25ஆம் தேதி கோவை வருகிறார். அன்று நடைபெற உள்ள பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைக்கிறார். பிரதமருக்கு தமிழக பாஜக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து பிப்.28 ஆம் தேதி விழுப்புரத்தில் நடைபெற உள்ள பிரசார கூட்டத்தில் மத்திய அமைச்சர்  உள்துறை அமித்ஷா கலந்து கொள்கிறார்.

அடுத்த மாதம் (மார்ச்) 8,9ஆம் தேதிகளில் பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகத்தில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். தமிழகத்தில் மீண்டும் அதிமுக அரசு அமைய வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பாஜகவின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று. அதேபோல் குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் பாஜக, அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்ததற்கு பாஜக காரணம் அல்ல நாராயணசாமியின் இயலாமையே காரணம். அவர்களது சொந்த கட்சியினரே பாஜகவில் இணைந்து வருகிறார்கள்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பதைக் கட்சியின் தேசிய மற்றும் மாநிலத் தலைமையும் முடிவு செய்யும். தமிழகத்தில் ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி தேய்ந்து கொண்டே இருக்கிறது.ராகுல்காந்தி வருகையால் கட்சி காணாமல் போய் விடும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

SCROLL FOR NEXT