முகப்பு
தமிழ்நாடு

திமுக-காங். தொகுதிப் பங்கீடு: மீண்டும் பேச்சு தொடரும் என அறிவிப்பு

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. எனினும் 2-ம் கட்டப் பேச்சு மீண்டும் நடைபெறும் என்று காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:36 PM
பகிர்:

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. எனினும் 2-ம் கட்டப் பேச்சு மீண்டும் நடைபெறும் என்று காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப் பேரவைத்தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளைப் பிரித்துக்கொள்வது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில், திமுக சார்பில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், கே.என்.நேரு, கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இதேபோன்று காங்கிரஸ் சார்பில் உம்மன் சாண்டி, தினேஷ் குண்டுராவ், கே.எஸ்.அழகிரி, ரன்தீப் சுர்ஜிவாலா உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு காங்கிரஸ் கட்சியினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்ததாவது, ''அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற முதல்கட்டப் பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது. தொகுதிப் பங்கீடு குறித்து 2-ம் கட்டப் பேச்சு தொடரும்'' என்று கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →