முகப்பு
தமிழ்நாடு

வேதாரண்யத்தில் போக்கு வரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: போக்குவரத்து பாதிப்பு

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தம் காரணமாக வியாழக்கிழமை பேருந்து போக்குவரத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது.

Updated On : 25 பிப்ரவரி, 2021 at 11:34 AM
அரசு பேருந்துகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படும் வேதாரண்யம் பேருந்து நிலையம்.
பகிர்:

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தம் காரணமாக வியாழக்கிழமை பேருந்து போக்குவரத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது.

புதிய ஓய்வூதிய ஒப்பந்தத்தை சட்டப் பேரவை தேர்தலுக்கு முன்பாகவே அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

வேதாரண்யத்தில் இருந்து அதிகாலை முதல் காலை 10 மணி நிலவரப்படி, ஒரு அரசு பேருந்து மட்டும் கோடியக்கரைக்கு இயக்கப்பட்டது. வழக்கமான நாள்களில் இந்த நேரத்துக்குள் 42 பேருந்துகள் வெளியூர்களுக்கு இயக்கப்படும்.

Advertisement

வேதாரண்யம் பணிமனையில் 120 ஓட்டுநர்கள் உள்ளட 249 மொத்தம் தொழிலாளர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தனியார் பேருந்துகள் வழக்கம் போல இயங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.