முகப்பு
தமிழ்நாடு

கொளத்தூரில் போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்பமனு

சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்.  

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:37 PM
மு.க.ஸ்டாலின்.
பகிர்:

சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். 

2011 மற்றும் 1016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தார் ஸ்டாலின். 

இந்தநிலையில்  கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதியிடம் மு.க.ஸ்டாலின் இன்று விருப்பமனு அளித்தார். 

திமுகவில் விருப்பமனு அளிக்க இன்றே கடைசிநாள் என்ற நிலையில் மு.க.ஸ்டாலின் விருப்பமனு தாக்கல் செய்தார். 1984ஆம் ஆண்டு முதல் தேர்தலில் போட்டியிட்டு வரும் ஸ்டாலின் 9ஆவது முறையாக போட்டியிடுகிறார். 

முழு கட்டுரையைப் படிக்க →