முகப்பு
தமிழ்நாடு

தில்லியில் கிங்மேக்கா்ஸ் அகாதெமியின் புதிய கிளை: ஜன.21-இல் மத்திய அமைச்சா் திறந்து வைக்கிறாா்

கிங் மேக்கா்ஸ் ஐ.ஏ.எஸ் அகாதெமியின் புதிய கிளைகள் தில்லி, மதுரை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள வளாகங்களை, மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங், ஜன.21-ஆம் தேதி திறந்து வைக்கிறாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:17 PM
பகிர்:

கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாதெமியின் புதிய கிளைகள் தில்லி, மதுரை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள வளாகங்களை, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், ஜன.21-ஆம் தேதி திறந்து வைக்கிறார்.
நிகழ்வில், இந்தியாவின் முதல் 100 சதவீத பார்வையற்ற மாற்றுத்திறனாளியான பெண் ஐஎப்எஸ் அதிகாரி பெனோ ஜெபின், குறைந்தபட்ச ஊதிய ஆலோசனைக் குழு உறுப்பினர் ஆனந்த் சாகு ஆகியோர், கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டு போட்டித் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களிடையே ஊக்க உரை நிகழ்த்துகின்றனர்.
அதேநாளில், அகாதெமியில் குறைவான கட்டணத்தில் பயிற்சி பெறுவதற்கான சிறப்பு கட்டண சலுகைத் தேர்வும் நடைபெற உள்ளது.
நிகழ்ச்சியில் இணைய வழியாக பங்குபெறும் அனைவருக்கும் 2013 முதல் 2020-ஆம் ஆண்டு வரை நடந்த குடிமைப்பணி தேர்வுகளுக்கான வினா, விடை தொகுப்புகள் இலவசமாக வழங்கப்படும்.
முன்பதிவுக்கு, <பெயர்> <செல்லிடப்பேசி எண்> மற்றும் <கிளை > ஆகிய தகவல்களை 94442 27273 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பலாம்.
மேலும் விவரங்களுக்கு, சென்னை அண்ணா நகர் ரவுண்டானா அருகில் உள்ள அகாதெமியின் தலைமை அலுவலகத்தையோ, www.kingmakersiasacademy.com என்ற இணையதளத்தையோ அணுகலாம் என கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாதெமியின் தலைமை இயக்குநர் பூமிநாதன் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →