தமிழ்நாடு

வாக்காளர் பட்டியல் வெளியீடு: தருமபுரியில் 12,60,909 வாக்காளர்கள் உள்ளனர்

DIN


தருமபுரி: தருமபுரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், மாவட்டத்தில் 12,60,909 வாக்காளர்கள் உள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 5 சட்டப் பேரவை தொகுதிகள் உள்ளன. இந்த 5 தொகுதிகளின் இறுதி செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த பட்டியலை தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் ச.ப.கார்த்திகா, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டு பேசினார்.

இதில், ஆண்கள் 637891 பேர், பெண்கள் 622857 பேர், இதரர்‌ 161 பேர் என 1260909 பேர் மொத்த வாக்காளர்கள் உள்ளனர். மேலும் மாவட்டத்தில் 1478 வாக்குச் சாவடி மையங்கள் உள்ளன. கரோனா பொதுமுடக்க விதிகள் பின்பற்றி 1000 வாக்காளர்களுக்கு அதிகமாக உள்ள‌ இடங்களில் கூடுதலாக 417 வாக்குச் சாவடி மையங்கள் ஏற்படுத்தக்கோரி தேர்தல் ஆணையத்துக்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அதிமுக, திமுக, தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

திருவிழாவில் கோஷ்டி மோதல்: 10 பேருக்கு கத்திக்குத்து

ராமநாதபுரம் மாவட்ட சிறைகளில் நீதிபதி, ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT