சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கும் பணியை தொடக்கி வைக்கிறார் இன்னீர்வீல் சங்க முன்னாள் தலைவி வசந்திமுரளிதரன்.  
தமிழ்நாடு

சங்ககிரி அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பொதுநல அமைப்புகளின் சார்பில் கபசுர குடிநீர் வழங்கல் 

சேலம் மாவட்டம், சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட், ஸ்ரீவாசவி கிளப் இணைந்து சங்ககிரி, நட்டுவம்பாளையத்தில் உள்ள அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி

DIN

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட், ஸ்ரீவாசவி கிளப் இணைந்து சங்ககிரி, நட்டுவம்பாளையத்தில் உள்ள அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. 

கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையையொட்டி அரசு பல்வேறு விதிமுறைகளுடன் செவ்வாய்க்கிழமை முதல் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. 

அதனையடுத்து சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட், ஸ்ரீ வாசவி கிளப் ஆகியவை இணைந்து சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நட்டுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 500 மாணவ, மாணவிகளுக்கு சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட்டிரஸ்ட் தலைவர் ஏ.ஆனந்தகுமார், ஸ்ரீ வாசவி கிளப் மண்டலத்தலைவர் ஆர்.கே.பத்ரிநாராயணன் ஆகியோர் தலைமையில் கபசுர குடிநீர் வழங்கினர். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வியாழக்கிழமை தொடங்கி சனிக்கிழமை வரை மூன்று நாள்கள் வழங்க உள்ளதாக பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள் தெரிவித்தனர். 

அரசு ஆண்கள்மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர்கள் சக்திவேல், ரங்கநாயகி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி  தலைமையாசிரியை  கவிதா,  நட்டுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சோமசுந்தரம், ஸ்ரீ வாசவி கிளப் நிர்வாகி முரளிதரன், இன்னீர்வீல் சங்க முன்னாள் தலைவி வசந்தி, சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் செயலர் ஆர்.ராகவன், பொருளாளர் எஸ்.கணேஷ், துணைத்தலைவர் எம்.பாலகிருஷ்ணன், நிர்வாகிகள் எம்.முரளி, சரவணன், பன்னீர்செல்வம், பொறியாளர் வேல்முருகன், முருகேசன் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் விபத்தில் சிக்கிய மணப்பெண்: மருத்துவமனையில் நடைபெற்ற திருமணம்

ராஜமௌலியின் வாரணாசி படத்தில் 6 பாடல்கள்!

மீனவர்களுக்கு நெருக்கமானது திராவிட மாடல் அரசு! முதல்வர் ஸ்டாலின்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களுக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு!

அரசுப் பள்ளிகளின் நிலை: அண்ணாமலை கேள்வி

SCROLL FOR NEXT