முகப்பு
தமிழ்நாடு

அந்தியூர் அருகே கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் பலி

அந்தியூர் அருகே கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழந்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:20 PM
அந்தியூர் அருகே கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் பலி
பகிர்:

பவானி: அந்தியூர் அருகே கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழந்தனர்.

சத்தியமங்கலம், கெம்பநாயக்கன்பாளையம் அம்மன் நகர் முதல் வீதியைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் செல்வன் (58). அதே பகுதியில் உள்ள சாவடி வீதியைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் ராஜன் (42). சோளத்தட்டு வியாபாரிகளான இருவரும் புதன்கிழமை இரவு அத்தாணியிலிருந்து அந்தியூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

கம்மங்காடு அருமலை கவுண்டர் தோட்டம் அருகே சென்றபோது எதிரில் வந்த காரும்,  இருசக்கர வாகனமும் எதிர்பாராமல் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →