ஜெயலலிதா நினைவிடம்: வரிசையில் நின்று பார்வையிடும் தொண்டர்கள்!
மெரீனாவில் குவிந்துள்ள ஏராளமான தொண்டர்கள் வரிசையில் நின்று ஜெயலலிதா நினைவிடத்தை பார்வையிட்டு வருகின்றனர்.
ஜெயலலிதா நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி திறந்து வைத்ததைத் தொடர்ந்து, அதிமுக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து மெரீனாவில் குவிந்துள்ள ஏராளமானத் தொண்டர்கள் வரிசையில் நின்று ஜெயலலிதா நினைவிடத்தை பார்வையிட்டு வருகின்றனர்.
ஜெயலலிதா நினைவிடம் திறப்பு நிகழ்ச்சியையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான தொண்டர்கள் ரயில் மற்றும் பேருந்துகள் மூலம் இன்று சென்னை மெரீனா வந்தடைந்தனர்.
Advertisement
Advertisement
நினைவிடத் திறப்பையொட்டி காமராஜர் சாலையில் குவிந்த தொண்டர்கள், ரிப்பன் வெட்டி ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதல்வர் பழனிசாமி திறக்கும்போது முழக்கங்களை எழுப்பினர்.
முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், சபாநாயகர் தனபால், மற்றும் அமைச்சர்கள் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் நீண்ட வரிசையில் நின்று நினைவிடத்தை பார்வையிட்டு வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.