பெட்ரோல், டீசல் விலை உயர்வு: இந்திய மாணவர் சங்கத்தினர் நூதனப் போராட்டம் (விடியோ)
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் தலையில் ஹெல்மெட் அணிந்தபடி சைக்கிள் டயரை உருட்டிக்கொண்டும், நுங்கு வண்டி உருட்டிக் கொண்டும் கோவையில் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் தலையில் ஹெல்மெட் அணிந்தபடி சைக்கிள் டயரை உருட்டிக்கொண்டும், நுங்கு வண்டி உருட்டிக் கொண்டும் கோவையில் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெட்ரோல், டீசல் விலை நூறு ரூபாயைக் கடந்துள்ளது. விலை உயர்விற்கு காரணமான ஒன்றிய அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அசார், செயலாளர் தினேஷ்ராஜா தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மாணவர்கள் தலையில் ஹெல்மெட் அணிந்தபடி சைக்கிள் டயரை உருட்டிக்கொண்டும், நுங்கு வண்டி உருட்டிக் கொண்டும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மத்திய அரசு, பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கலால் வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் பெரு முதலாளிகளுக்கு வரி சலுகைகள் அளித்துவிட்டு சாதாரண மக்கள் மீது பெட்ரோல், டீசல் விலை உயர்வை திணிப்பதாகவும் குற்றம்சாட்டி முழக்கங்களை எழுப்பினர்.
மத்திய அரசு விலைக் குறைப்பில் ஈடுபடும் வரை தொடர்ந்து போராடுவோம் என மாணவர் சங்கத்தினர் தெரிவித்தனர்.